கடல்
பாற்கடலை நம்பாத பேர்கள் உண்டு
பரமபதம் இல்லைஎன மறுத்தும் சொல்வீர்
பார்கடலின் நீரைத்தான் மேகம் பெய்யும்
பகுத்தறிவு வாதிகளே பாரும் என்று
பாக்கடலில் தாய் ஆண்டாள் எடுத்துச் சொன்னார்
பகைத்தவராம் நாத்திகரும் ஏற்றார், நீங்கள்
நீர்கடலில் கழிவுகளை கொட்ட லாமா?
நிலம்கடலை இழந்தால் நாம் என்ன ஆவோம்?