காலத்தை வென்றவன் நீ

காற்று வாங்கச் சென்றே-நீ
கவிதை வாங்கித் தந்தாய்
காற்று வாங்க மறந்தே –நீ
கண்ணை மூடிக் கொண்டாய்
கவிதை சொல்லத் தானா –நீ
கனவு காணு கின்றாய்
மனதை வெல்லத் தானா –நீ
மவுனம் பூணு கின்றாய்
மூன்றெழுத்தில் எந்தன்
மூச்சிருக்கும் என்றாய்
மூன்றெழுத்தை தந்தே-அந்த
முருகன் ஆண்டு கொண்டான்
மாலி ஆக வந்தாய்
வாலி யாகி நின்றாய்
காவியங்கள் தந்தாய்
காலம் தன்னை வென்றாய்
வாலி மறைந்த அன்று எழுதிய கவிதை

எழுதியவர் : சு. ஐயப்பன் (8-Jun-14, 4:11 pm)
பார்வை : 214

மேலே