எல்லாம் அழகு

வெட்கப்படும் பெண்மை
அழகு ..

வெள்ளி நிலவின்
வெளிச்சம் அழகு ..

சின்ன குயிலின்
கீதம் அழகு ..

சொல்லி தந்த
வேதம் அழகு ..

ஓடை நீரில்
மீன்கள் அழகு ..

மேடை ஏறும்
கால்கள் அழகு ..

கோடை தணிக்கும்
மோரும் அழகு ...

கொள்கைக்காக
போரும் அழகு ...

வான வில்லின்
வண்ணம் அழகு..

வால்மீகியின்
எண்ணம் அழகு ..

மை பூசும்
கண்கள் அழகு ..

பொய் பேசும்
பெண்கள் அழகு ...

புல்லில் தூங்கும்
பனி அழகும் ...

வில்லில் தங்கும்
அம்பு அழகு ..

நீலம் பூசிய
வானம் அழகு..

கோலம் பூசிய
வாசல் அழகு..

தாகம் தருகிற
மோகம் அழகு ..

மோகம் தருகிற
மோட்சம் அழகு ..

வீரம் தருகிற
காதல் அழகு ...

விடியல் தருகிற
சூரியன் அழகு..

விரிந்து நிற்கிற
பூக்கள் அழகு..

விளைந்த நிற்கிற
கதிர்கள் அழகு ..

சாலை ஓரத்தில்
சோலை அழகு..

சேலை ஓரத்தில்
லீலை அழகு..

காமன் மண்டபத்தில்
யாவும் அழகு ...

கால நேரம் பாராமல்
நீயும் பழகு ..!!!

எழுதியவர் : அபிரேகா (9-Jun-14, 4:32 pm)
Tanglish : ellam alagu
பார்வை : 94

மேலே