கிரக பலன்
ராகு காலம்
எம கண்டம்
ஆராய்ந்து,
சித்திரைக் கழிவு, சூலம் பற்றி
ஆலோசித்து,
சனி சஞ்சாரம் எப்படி என்று
பண்டிதரிடம் கேட்டு ,
மேல் நோக்கு நாளா என்று உறுதி செய்து ,
அடுத்து
பாட்டிமை, நவமி,
கரி நாள்,
வாஷ்து தோசம் ,
இத்தனையும் பார்த்து
எழுந்து நின்ற போது
எல்லா வாய்ப்புகளும்
எதிர் வீட்டு நிலைப்படியில்!!