உனக்கு தெரிந்திடுமா

சிறைக்கதவுகளை தட்டிவிடு
உனது விடுதலை காண........!

உனது மனதை திடப்படுத்து
கஷ்டங்களை எதிர்த்திட.........!

உலகத்தை நன்றாக பார்
முன்னே எத்தனை அனுபவம்.....!

உன்னோடு நீ போர் செய்திட
ஆயுதங்களை சேகரி விரைவாக.........!

துணிவை தவிர வேறொன்றும்
உன்னிடம் நிலைப்பதில்லை.......!

புரியாத புதிருக்கு உனது
சிந்தனையே விடைதருமே........!

எங்கும் தேடும் நிம்மதி
உன்னிடமே இருக்கறதே தெரியுமா.......!

யோசித்தால் உனக்கே நீ சொந்தம்
நீ தெரிந்துகொள்வதர்க்காக........!

உன்னோடு நீ பேசிடு
உன்னை வழிடத்திட.......!

காலம் உன்னை துரத்துகிறது
உனது பாதையை அமைத்துக்கொள்.......!

வெற்றியை நீ தெரிந்திட
தோல்வியை கண்டுகொள்........!

உனது அருகே உலகம்
திரை இல்லாமல் தெரிகிறது........!

மாற்றவேண்டியது உன்னை அல்ல
உனது குணத்தை மட்டும்தான்......!

எழுதியவர் : லெத்தீப் (10-Jun-14, 11:00 am)
பார்வை : 213

மேலே