வீட்டில் வாழும் தெய்வங்கட்குப் படைத்து உண்ண வேண்டும் - ஆசாரக் கோவை 39

தமக்கென் றுலையேற்றார் தம்பொருட்டூண் ...கொள்ளார்
அடுக்களை யெச்சிற் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்ப ஊண். 39 ஆசாரக் கோவை

பொருளுரை:

நற்குணங்களை உடைய பெரியோர் தமக்கு வேண்டும் என்று உலை வைக்க மாட்டார்கள்.

பிறருக்கு உழைப்பதற்காக அல்லாமல் தம் நலனுக்காக மட்டும் உணவு உட்கொள்ள மாட்டார்கள்.

அடுக்களையில் உணவுப் பொருட்களில் எச்சில் படுத்த மாட்டார்கள்.

வீட்டில் வாழும் தெய்வங்கட்குப் படைத்து ஊட்டியதை யறிந்த பின்னர் தாமும் உணவு உண்பார்கள்.

பலி - தெய்வங்கட்கு இடும் உணவு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-14, 12:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 94

மேலே