தொலைந்து போன மனிதம்

சிறுமிகளை வதைத வன்புணர்ச்சி
வன்முறையின் கொடுமை என்பதா ...?
ஜாதிகளின் வக்கிர புத்தி என்பதா .........?

கழிபிடத்துக்கு சென்ற சிறுமிகளை
கற்பழித்து கொன்ற காமுகர்களுக்கு
அந்த இரவு துணை போனதா .......?

மனிதம்
காமத்தால் மடிந்து போனதா .......?
ஜாதிகளின் பிடியில் சிக்கி சிதைந்து போனதா ...?

மனிதத்தை தொலைத்த மிருகங்களே
துடி துடித்து அழுத சிறுமிகள் - அந்த
இரவில் யாரை நினைத்து அழுதிருப்பார்கள்...!

கூட்டு வன் புணர்ச்சியில் குதறிய
உடல்களை மரத்தில் தொங்க விட்ட மனிதர்களே
உன் தாய்க்கும் பெண் உறுப்பு இருப்பதை
ஏன் மறந்துப் போனாய் ..............? - உன்
சகோதரிக்கும் பெண் உறுப்பு இருப்பதை
ஏன் அறியாமல் போனாய்.................?
உனக்கும் ஒரு பெண் குழ்ந்தை இருக்குமே
அதை என்ன செய்யப் போகிறாய் ......?

பெண்மையே நீ சீறி சுனாமியாய்
வருவது எப்போது..................?
ஆட்டம் போடும் ஆண் குறியை
நீ அறுத்தெறிவது எப்போது ......?
அந்த நாள் தான் சிறுமிகளின்
ஆன்மா நிம்மதி அடையும் .......!
அதுவரை ஆண்களுக்கு .............. எதற்கு ..!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (11-Jun-14, 9:29 pm)
பார்வை : 264

மேலே