அதிவேக வளர்ச்சி - இராஜ்குமார்

கண் இழந்து
கடமை நிற்க
காசு கொடுத்து
காத்திருப்போம் ..!

எண்ணி பார்த்து
ஏளனம் செய்யும் வரை ..!!

அன்பை
அடகு வைத்து
வாங்கிய பணத்தில்
வளமாய் வாழ்வோம் ..!!

மீண்டும் மீட்க
போலி புன்னகை
பூசி வருவோம் ..!!


உயிர் காக்கும் உணவை
குப்பையில் எறிந்து - பின்

சிதறிய சிற்றிக்கை
உணவாய் சிந்திப்போம்
பட்டினிக்கு பாசம்
காட்டும் பாசாங்கில் ..!!

கண் சொல்லும்
கருணை ஒன்றை
ஆடம்பர
சட்டையில் சாகடித்து
சமரசம் செய்து
சாதனை புரிவோம் ..!!

தன் இன்பத்தை
உயர்த்தி
இன்பம் காண்போம்
பிறர் துன்பம்
துடைக்கும்
இன்பம் வெறுப்போம் !!

இலவச கல்வியை
ஏளனம் செய்வோம்
காசு கொடுத்தே
கல்வி பெறுவோம் ..!!

நாங்கள்
மாற்றி விட்டோம்
சமூகத்தை .!!

அழிவு பாதையில்
அதிவேக
வளர்ச்சியுடன் .!!

இனி
வற்றிப் போன
வண்ணத்தில்
நிழலாய் நிற்கும்
நிம்மதியை
நிமிடத்தில் தொலைத்து
சுற்றி சுற்றி
தேடுவோம்
சுகத்தை ..!!

-- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (12-Jun-14, 3:11 am)
பார்வை : 193

மேலே