வள்ளம் கவிழ்க்கும் துடுப்பு

ஆசை வலையில் அகப்பட்ட வாழ்விலே
ஓசை அடங்கா உலையென கொதிக்கின்ற
உள்ளத்தில் என்றும் உருவாகும் எண்ணமோ
வள்ளம் கவிழ்க்கும் துடுப்பு.

வானத்தில் இருக்கும் நிலவினைக் கண்டிட்டால்
தானமாய் பெற்ற விளக்கை மறக்கின்ற
ஈனப் பழக்கம் இருக்கின்ற நெஞ்சத்தின்
ஊனத்தை நொறுக்கு உடைத்து.

துடுப்பற்ற வள்ளம் கரைதேடும் நேரம்
கடுப்புற்ற வானம் கடும்மழையைக் கொடுக்க
திசைமாறல் போலே திசைமாறும் வாழ்வை
அசைபோட்டு உண்மை விளங்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Jun-14, 2:45 am)
பார்வை : 114

மேலே