காலை இங்கு

காலை இங்கு
கண் விழிக்குது.....
சாலையில் சத்தம்
காது
கிழிக்குது.....
மேகக் கூட்டங்களை
பிடிக்க
பறவைக்
கூட்டங்கள்
போட்டி போடுது....
அலுவலக
அவசரங்கள்
அவஸ்தையாய்
போனது.....
பள்ளிக்கான
ஆயத்தங்கள்
சொல்லிக்கொள்ள
முடியாத
சுவையான
யுத்தங்கள்....
சாலையில் நகரும்
சக்கர
வண்டியும்.....முச்
சக்கர
வண்டியும்
பீதியோடு
புழுதியும்
கிளப்பும்....
அழகிய காலை
அமைதியாய்
வந்து
அமளிகள்
தந்து
அமைதியாய்
உறங்கியதே.....