விடை அறியா முகவரிகள் -நாகூர் லெத்தீப்

விரட்டப்பட்டோம் வீதியிலே
நிற்கிறோம் முகவிரி இல்லாமல் !

தினம் ஒரு வாடிக்கையாளர்
வேடிக்கையான வருமானத்துடன் !

தட்டில் விழும் சில நேரம்
தரையில் விழும் சில்லரைகாசுகள் !

எங்களின் வயிறே எங்களின்
எதிரியாக தெரிந்திடும் !

உயிர் அற்ற மனிதர்களாய்
வாழ்கிறோம் நிலையற்ற உலகில் !

தினமும் கிடைக்கும் பரிசு
தாங்கமுடியாத மனவேதனை !

சடங்குகள் இல்லை சமய
வழிமுறைகள் இல்லை எங்களுக்கு !

எங்களின் உறவு இரக்கமுடன்
பார்க்கும் தெரியாத மனிதர்களே !

கைகளோ ஏந்திடும் மனதோ
வெட்கத்தில் மாய்ந்திடும் !

வழியறியா வயோதிகள் வாழ்வை
துறந்த யோகிகள் நாங்களே !

இளமையில் முதுமை நாங்கள்
கண்டிடும் விளகாத வறுமை !

நாங்கள் கண்ட தொட்டில்
குப்பை தொட்டில்களே !

போராட்டத்தை சுமந்து
நடைபோடும் சாலையோரத்தில் !

கருணை உள்ளத்தை கண்டால்
வாழ்த்துவதே எங்களின் வாடிக்கை !

ஆண்டவன் போட்ட பிச்சையிலே
உலகை கடக்கிறோம் நடக்கிறோம் !

எழுதியவர் : லெத்தீப் (12-Jun-14, 4:18 pm)
பார்வை : 87

மேலே