பூமியை மாற்றிடு - குமரி

எல்லாவுயிரும் உயிர்தானே
உயிருகில்லை நிகர்தானே..!

நீ கொல்லும் உயிரது ஓருயிரா..?
நீளும் பரம்பரை அது அறியாயோ..!

ஒரு உயிரை காப்பதும் அதுபோல
ஒரு பரம்பரை பந்தம் காக்கின்றாய்..!

மறைகள் சொன்ன வார்த்தை இது
தலைமுறை மறந்து போனது ஏன்..?

வன்முறை மலிந்து காண்பது ஏன்..?
நன் முறை நலிந்து தேய்ந்தது ஏன்..?

பொறுத்தவர் மட்டும் பூமி ஆள்வார்
வெறுத்தவர் என்றும் வேதனையே..!

ஒபாமா அரசு கொன்றாலும்
ஒசாமா குண்டு கொன்றாலும்

கொலைகள் எல்லாம் ஒன்றேதான்
சொற்கலைகள் குற்றம் கழுவாதே..!

வழியும் ரத்தம் ஒன்றேதான்
விழிநீர் சுவையும் ஒன்றேதான்

சாதியும் சனமும் ஒன்றேதான்
சர்வத்தின் தெய்வமும் ஒன்றேதான்

வாழும் உலகமும் ஒன்றேதான்
வீழும் மண்ணறை ஒன்றேதான்..!

வேதனை மொழியும் ஒன்றேதான்
சாதனை எதற்கு கொன்றேதான்..?

உன் உசிரை மாய்க்க உன்னாலே
உரிமை இருக்கா சொல் தன்னாலே

உசிரை கொடுத்த இறைவனுக்கே
உசிரை எடுக்க விதி இருக்கு..!

வன்மத்தை களைந்திட மாட்டாயோ
வளரும் தர்மத்தை காத்திட மாட்டாயோ..!

இறந்த காலம் நீ மறந்திடு
இருக்கும் காலம் நீ மகிழ்ந்திடு..!

வளரும் தலைமுறை வருந்தாமல்
வளமாய் பூமியை மாற்றிடு..!

எழுதியவர் : குமரி பையன் (12-Jun-14, 7:13 pm)
பார்வை : 276

மேலே