உ சொல்லும் வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
பழமையே உறங்கிடு
புதுமையை உரித்தெடு
வீரமாய் உலவிடு
உனக்கு உண்மையாகிவிடு
பிறர்க்கு உதவிடு
ஏழைக்கு உணவிடு
பணத்திற்கு உழைத்திடு
சோம்பலை உமிழ்ந்திடு
மானத்திற்கு உறையிடு
தடைகளை உடைத்திடு
சுதந்திரமே உயிராகிவிடு
அன்பிற்கு உரமிடு
கோபத்திற்கு உடையிடு
வெற்றிக்கு உவமையாகிவிடு
தோல்வியிலும் உறுதியாகிவிடு
நன்மையை உறவாக்கிவிடு
தீமையை உதைத்துவிடு
பாரெல்லாம் உலாவந்திடு
தாயையே உலகாய்க் கொண்டிடு!!