எண்பது வயதாகியும்

தத்தி நடக்கும் வயதில்
தந்தையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

பயந்து நடக்கும் பால வயதில்
பள்ளி வாத்தியார் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

மீசை முளைத்த வயதில்
ஆசைப் பேய் பிடித்து
பயணம் செய்தாய் !

கும்மாளம் போடும் வயதில்
"குடி"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

புத்தி கெட்ட வயதில்
"புகை"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

கண்டதை ரசிக்கும் வயதில்
காதலியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

குடும்பம் சுமக்கும் வயதில்
குலமகள் மனைவியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

ஓடி ஆடி ஒய்ந்த வயதில்
உன் பிள்ளையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

நீ தள்ளாடி தளர்ந்த வயதில்
நீண்ட நித்திரையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

எண்பது வயதாகியும் ஏ மனிதா !
இன்னும் தர்மத்தின் கையைப் பிடித்து
பயணம் செய்ய மறந்தாயே
பாவம் நீ மனிதா !

- திருமூர்த்தி, சென்னை

எழுதியவர் : திருமூர்த்தி (14-Jun-14, 11:21 am)
பார்வை : 82

மேலே