மேகங்கள்

ஆதவன் ஆதரவால் ஆளான மேகங்களே
பிறந்த பார்மகள் பால் பாசமிகு மேகங்களே
பகலவன் சினம் தணிக்க குடையாய் விரிந்தீரோ
நிலமடந்தை தாகம் தணிக்க உம்மையே தந்தீரோ
தானே கரைந்திடினும் தாயின் துயர் தீர்க்கும்
குணத்தால் உயர்ந்ததாலோ வானுயர சென்றீரோ.

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (14-Jun-14, 1:29 pm)
Tanglish : megangal
பார்வை : 201

மேலே