தந்தையர் தினம்

அப்பா .........
==========
அப்பா அனுபவத்தின் அகராதி
பாசத்தோடு தன்னம்பிக்கையும் ஊட்டியவர்
தான் அடியமுடியாத இலக்கை - நம்மை
அடையவைத்து அழகு பார்த்தவர்

அப்பா ................
நம் முகவரிக்காய்
தன் விலாசத்தை தொலைத்தவர்
நாம் சூரியனாய் வளம் வர
தன்னை அழித்து வெளிச்சம்
தந்த மெழுகு வர்த்தி ..........!

அப்பா ....!
பொய்யான உலகில்
நம்மை மெய்யாய் படைத்த
பிரம்மா .......!

கருவை சுமப்பவள்
தாய் என்றாள்- பிள்ளைகளின்
எதிர்கால கனவுகளை சுமப்பது
அப்பாக்கள் மட்டும் தான்

கல்லூரி வாசல்களில் மரங்கள்
நின்றிகிறதோ இல்லையோ....!
பிள்ளைகளுக்கு சீட்டு வாங்க
அப்பாக்கள் மரமாய் நிற்கின்றனர் !

நண்பர்களே .....!
தாயின் பாதம் சொர்க்கம் என்றால்
தந்தையின் அறிவுரைகள்
கடவுளின் வார்த்தைகள் ...!

அப்பாவின் தியாகங்கள் எல்லாம் ஏனோ
காலச் சுவட்டில் மறைக்கப் பட்ட
ஏடுகளாக மறுக்கப் படுகின்றன ...!

ஒரு காலத்தில் ராஜகோபுரமாக
உயர்த்து நின்ற அப்பாக்கள்
இப்பொழுது வெறும் படிக்கட்டுக்களாக
மாறிப் போகின்றனர் - இன்னும் சிலர்
மண்ணிலே மறைந்த படிக்கட்டுக்களாக
புதைந்து போயினர் - இருந்தாலும் அந்த
படிக்கட்டுக்கள் எல்லாம் இன்னும்
பிள்ளிகளுக்காய் காத்திருக்கின்றன
சோர்ந்து போகும் பொது தாங்கிக் கொள்ள ..!

மழை கூட மண்ணிடமிருந்து
கைம்மாறு எதிர் பார்க்கின்றன ...!
அப்பாக்கள் மழையை விட மேலானவர்கள்
பிரதி பலனை எதிர் பார்க்காமல்
கரன்சியை மட்டும் வழங்கும்
A T M எந்திரங்கள் .......!

இளஞர்களே .........!
அப்பா என்னும் அனுபவக் கண்ணாடியை
உங்கள் இளமை முருக்கால்
போட்டுடைத்து விடாதீர்கள் ...!
அப்பா உங்களுக்காக
வரிசையில் நின்ற நாட்களை
என்றுமே மரக்காதீர்கள் ...!
ஏன் என்றால் இன்னமும்
அவர் உங்களுக்காக
வரிசையில் தான் நிற்கின்றார்
கடவுளிடம் கை ஏந்தி ...!

பிள்ளைகளே .! பிள்ளைகளே ...!
உங்கள் அப்பாவின் உள்ளங் கைகளை
என்றாவது பிரித்து பார்த்ததுண்டா ?
அதில் இருப்பது ரேகைகள் அல்ல
பிள்ளைகளின்
எதிர்கால வரை படங்கள் ...!

அப்பா என்னை பெற்ற அப்பா ....!
நீ அன்று அடித்த அடியின் வலி
நீ இல்லாத போது இன்று தான்
வலிக்கிறது - உன் கை விரல்களை
பிடித்துக் கொண்டு நான் நடக்க
வேண்டும் அப்பா ........வழியும்
என் கண்ணீரை துடைக்க உன்
விரல்கள் வேண்டும் அப்பா .....!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (14-Jun-14, 11:21 pm)
Tanglish : thantaiyar thinam
பார்வை : 641

மேலே