பரப்பற்க பந்த ரகத்து - ஆசாரக் கோவை 45
துடைப்பந் துகட்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலங் கட்டில் கிழிந்ததனோ டைந்தும்
பரப்பற்க பந்த ரகத்து. 45 ஆசாரக் கோவை
பொருளுரை:
துடைப்பம்,
துகளோடு கூடிய சிதறிய குப்பை,
பூவின் உதிர்ந்த புறவிதழ்,
பழமையான கரிச்சட்டி,
கிழிந்த கட்டில்
ஆகிய இந்த ஐந்தையும் நற்காரியங்கள் நடை பெறும் மணப்பந்தலின் கீழ் பரப்பக் கூடாது.
துடைப்பம் – பெருக்குமாறு, துரால் - செத்தை. செத்தல் – பசுமையற்றது,
புல்லிதழ் - மலரின் மேற்புறத்துள்ள இதழ், புறவிதழ், அகவிதழ் – அல்லி எனப்படும்.