வினோதனின் குறும்பூக்கள் - 7
கன்னக் கிண்ணங்களில்
அழகமது - நிரப்பிச் சிரிக்கும்
கன்னி அன்னமவள் !
கன்னங்களில் அழுத்தி
கைகுட்டையால் எடுப்பது - அழகென
எப்போது நம்பும் இவ்வுலகு !
தசைப் பஞ்சென - சிவந்து
கிடக்கும் கன்னங்களில்
முகமாவுகள் முகாமிடுகின்றன !
வெட்கத்தின் உச்சியில் கன்னங்கள்
நிறம்மாறும் - நிலாவிலிருந்து
அந்திவான சூரியனாய் !
அவள் கன்னக் குழிகளில்
விழுந்து வீழ்ந்த - எனக்கு
சிறையாகவும் அதுவே ஆகிறது !
- வினோதன்