அவனும் இவனும்

ஒரு தப்பை
ஒருவன் செய்து
ஒரு வருடமாகிறது !

இன்னொரு தப்பை
இன்னொருவன் செய்து
ஒரு மாதமாகிறது !

இரண்டு பேரில்
முதலாமவனை
சீனியாரிட்டிப் படி
மன்னித்து விடுவோம் !

இரண்டாமவனை
மன்னிக்க
பதினோரு மாதங்கள்
காத்திருப்போம் !

கூட்டிக்கழித்துப்
பாருங்கள் !
தீர்ப்பு
சரியாக வரும் !

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (18-Jun-14, 7:32 pm)
Tanglish : avanum ivanum
பார்வை : 105

மேலே