கல்லூரியின் கதை

நாகரிகத்தின் அடையாளம் கவிதை
அதுபோல்
வாழ்க்கையின் அடையாளம் கல்லூரி...

திறமை எனும் தூணை வைத்து வாழ்க்கை
என்ற கோட்டை கட்ட உதவிய இடம்...
அதுமட்டுமில்லாமல்
சாதி என்னும் கொடிய நோய்க்கு சஞ்சீவி
மூலிகை தந்த இடம்...

நமது அறியாமையை நீக்கி அறிவொளி புகுத்தி
அறவழி காட்ட துரோணர்கள் கூரிய வார்த்தைகள்
வேப்பிலையாய் கசந்த நாட்கள் மாறி இன்று தான்
மருந்தாக ஆரம்பித்தன...

முடிந்து விடாத என்று எண்ணிய நாட்கள்
இன்னும் சில நொடிகளில் முடியப் போகிறது...

நிஜங்களை//நிகழ்வுகளை நினைவுகளுக்கு மட்டுமே
சொந்தமாக்கி விட்டு செல்கிறோம்......??
இனிவரும் காலங்களில் நாம் பிரிவோம் முடிந்தால்
சந்திப்போம்...

பெ.பாரத்
(என்றும் நினைவுடன்)

எழுதியவர் : பெ.பாரத் (18-Jun-14, 9:27 pm)
Tanglish : kalloriyin kathai
பார்வை : 1201

மேலே