மனதிலாவது என்னையும் கொஞ்சம் வைத்துக்கொள் -ஹிமாத்ரி
ஆசை வைச்ச மாமன்
அடங்காமல் குதிக்கின்றேன்
அடியே அழகியே என்னை
அப்படியே அள்ளிக்கொள்...
செல்வாக்கு எதற்கடி செல்லமே!
செம்பெல்லாம் தங்கமாகும் வைரமே!!!
சாவாயினும் உன்னாலே தகுமா?
சாட்சி சொல்ல எதுவாயினும் வருமா?
உன் வாசம் பட்ட
இடமெல்லாம் வலிக்கிறது
உன் சுவாசம் முழுதும்
நானாக துடிக்கிறது....
நினைவினை நினைக்கவே
விருப்பமென்ன?
அதற்கெனும் நேரம் வகுக்கும்
அதிசயமென்ன?
அமைதியில் என்னையே தூக்கிலிட்டாய்
நல்ல வேலை கனவினில் தொங்கினேன் துடிக்கவில்லை...
கணினியின் காதலில்
கால் பதித்தோம்
கால்நடை ஜென்மமாய்
பகுத்தறி விழந்தோம்...
பிள்ளையார் பூஜையில்
பிடிவாதம் கொண்டேன்
கன்னிபக்தனாய் கன்னிக்காக
வாக்குவாதம் செய்தேன்
என் கன்னிக்காக செய்த பூசையல்லவா!?
பிள்ளை யாரும் மாறினார்
கல்யாண ராமனாக....
சென்ற பாதையெல்லாம்
விழாவாக மாறிய விளக்கமென்ன?
அதே விழாவினுள்
இவள் சென்றால்
குலசாமியே குமரிப்பெண்ணாய்
வந்ததென வரலாறில்
புதைந்த வெளிச்சமென்ன....?
பார்க்கும் பார்வையெல்லாம் பூக்களானால்
கனிகளின் கதியென்ன?
மூளையில்லா பூக்காரி
அவளிடமே பூக்கொடுத்தால்
பூக்கள் கொள்ளும் இன்பம்
எவர் அறிவார்?
சோகமோ சுகமோ உன்னாலே!
செல்வாமாயினும் செல்லமாயினும்
பெண்ணே உனக்காகவே!!
அறிவோ அழிவோ எது வந்தாலும்
பரவாயில்லை
அன்பு மட்டும் வைத்துக்கொண்டால்
சுகமாயில்லை?
கொஞ்சக் கூட வேண்டாம் அன்பே!
உள்ளே மட்டும் வைத்துக்கொள்
அழகியே..! மனதிலாவது
என்னையும் கொஞ்சம் வைத்துக்கொள்....