ஏற்றுக்கொள்வாயா என்னை
சுகமா சோகமா .................?
இருளா ஒளியா..................?
இறையா குறையா ................?
புரியாத புதிர் இசையோடு இதயத்தை
புரட்டி போடுகிறது
புதிதாய் என்ன இது ...................?
என் ஒவ்வொரு நொடி
மரணத்திற்கும்
அவளின் ஒரு நொடி பார்வை தரும்
ஜனனத்திற்கும்
அர்த்தம் கொடுக்கும்
அகராதி இருந்தால் கொடுங்கள்
மனனம் செய்தேனும்
அறிந்துகொள்கிறேன் இது
என்ன என்று ....................................!
ஏமாற்றம் அற்ற
ஏதோ ஒரு மாற்றம் என்னுள்
இன்பதுன்பத்தின் கலப்பின
மலர் ஒன்று
மலர்கிறது என்னுள்
என்ன அது ................................?
நிறக்குருடனாய் அலைகிறேனடி
அன்று கண்ட உன் ஆடையின்
பச்சை நிறம் தவிர வேறேதும்
தெரியவில்லையடி ......................!
நிலா முகத்தில் பளிச்சிட்ட
கதிர் ஒளி சிரிப்புகளில்
அய்யோ உருகி விழுந்த
ஐஸ்க்ரீமில் மிச்சம் இருக்கும்
குச்சி போல் மெலிந்து விட்டேனடி ................!
யாரும் அற்ற போது
உணர்ந்த தனிமையை
அனைவர் இருந்தும் உணர்கிறேனடி ............!
என் வீட்டில் விலைவாசியை
கட்டுபடுத்துகிறேன்
இந்நாட்டில் வருங்காலத்திற்கு தண்ணீரை
மிச்சம் செய்கிறேன்
உண்ணாமல், குளிக்காமல்
என்ன செய்தாயடி என்னுள் ......................?
இரவிடம் பேசுகிறேன்
நிலவிடம் நீ எல்லாம் அழகா
என ஏசுகிறேன்
தென்றலிடம் எப்படியாவது உன்
சுவாசத்தை களவாடி வர
சொல்லி நச்சரிக்கிறேன்
என்ன ஆனதடி எனக்கு .......................?
கஞ்சனாய் தானே இருந்தேன்
எப்படி நடந்தது ..........?
தங்கு தடை இன்றி
மிச்சம் மீதி இன்றி அனைத்தையும்
கொடுத்துவிட்டேனடி
உன் ஒற்றை பார்வைக்கு விலையாய்............!
மறு பிறவி கட்டு கதைகள்
உண்மையாக வேண்டுகிறேன்
ஒரு ஜென்மம் உன்னுடன் போதாது என ......!
நீ கண் சிமிட்ட
மின்னல் வெடிக்கிறது
பேசி சிரிக்கையில்
மழையும் பொழிகிறது என்னுள் .................!
அடடா இதுதான் காதலா ............?
சரி ஏதோ ஒன்று
என் உணர்வு நரம்புகளும்
என் உணர்ச்சி நரம்புகளும்
சங்கமித்து பிறந்த இதை
ஆராய்ந்து சாவதை விட
அனுபவித்து சாகிறேனடி .............!
என்னவளே ஏற்றுக்கொள்வாயா
என்னை ...................?