தடம்
நூல் பிடித்தது போல்
நேர் வரிசையில்
கால் நடை பயின்றன
்எறும்புகள் ஆறு.
நெளிந்தும் ஊர்ந்தும்
ஓடிய கருங்கோடு
திடீரென நின்றன
வழியில் இடையூறு..
எதிரில் வழியடைத்த
புழுவிடம் ராணியெறும்பு,
மண்ணிலே பிறந்து
மண்ணிலே இறக்கும்
மண்புழுவே நீ
ஏன் இப்படிக் கோடு
போட்டுச் செல்கிறாய்
என்று கேட்டது.
மண்ணிலே பிறந்து
மண்ணிலே வாழும்
இருவயிறு கொண்ட
உலோபமே நான்
கோடு போடவில்லை
தடம் பதித்துச்
செல்கிறேன் என்றது.