ஹைக்கூ இரா .இரவி

ஹைக்கூ இரா .இரவி

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

விமர்சனங்களுக்கு
செவி மடுக்கவில்லை
தவளை

இராமாயண மாற்றம்
கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்

மலர்களோடு பேசினேன்
அவளின் தாமதத்திற்கு
நன்றி

பாராட்டினார்கள்
சிலையையும் சிற்பியையும்
சோகத்தில் உளி

ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி


பொருத்தமாக இல்லை
எயிட்ஸ் விளம்பரத்தில்
நடிகர்

கூவலின் இனிமை
இனப்பெருக்கத்தில் இல்லை
குயில்

திருந்தாத மக்கள்( மாக்கள் )
அமோக வசூல்
சாமியார் ? தரிசனம்

முக்காலமும் எக்காலமும்
அழியாத ஒன்று
காதல்

வேகமாக விற்கின்றது
நோய் பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்

உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மாக்

விதைத்த நிலத்தில்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள்

எழுதியவர் : இரா .இரவி (10-Mar-11, 8:00 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 372

மேலே