கண்களையும் கண்ணீரையும் காட்டியவளே 555
என்னவளே...
நான் திரும்பும் திசையெங்கும்
ஆயிரம் பெண்கள் இருந்தாலும்...
உன் ஒருத்தியை மட்டுமே
என் மனம் தேடி அலையுதடி...
இருகண்கள் எனக்கு
இருந்தும்...
மண்ணை பார்த்து
நடந்த எனக்கு...
உன் பாதம் பார்த்து
தலை உயர்த்தினேன்...
என்னையும் மறந்து என்னை
நான் இழந்தேன் உன்னிடம்...
எனக்கு கண்கள் இருப்பதையே
அப்போதுதானடி உணர்ந்தேன்...
எனக்கு திருமணம் விடை கொடு
என்று நீ சொன்ன போதுதானடி...
என் கண்களிலும் கண்ணீர்
இருப்பதை உணர்ந்தேன்...
கண்களையும் கண்ணீரையும்
எனக்கு காட்டியவளே...
நீ காலமெல்லாம் கண்ணீரை
காணாமல் வாழவேண்டுமடி...
என்றும் உன்னை
வாழ்த்தும் உன்னவன்.....