அரசியல் நாறுமா மாறுமா
மேடை மேல் மேடை வைத்து
ஓட்டை வாய் ஓடை போலே
காவேரி நீர் கொண்டு
வருவோம்
குடம் வைத்தாவது மொண்டு
வருவோம்
தடையற்ற மின்சாரம்
தடை போடுபவனுக்கு
இருக்காது சம்சாரம்
பள்ளமற்ற பாதைகள் இருக்கும்
திரை ஒன்றை கட்டினால் அது
மழையை ரோட்டின் மேல்
விழாமல் தடுக்கும். .........
கண்ணீர் துடைக்க கைக்குட்டை
குழந்தைகள் விளையாட புதுமட்டை
எதிர்பவன் தலையில்
முழுமொட்டை
என் ஆட்சியில் இருக்கவே
இருக்காது தலையில் சொட்டை
நாங்கள் இருக்க இருக்காது திருடர்கள் சேட்டை
பூட்டவே வேண்டாம் உங்களின் வீட்டை
ஆதலால் போடுங்கள் எனக்கு வீணான ஓட்டை
கயிறு கட்டி காப்போம் நமது நாட்டை
என வந்ததை சொல்லி
ஓட்டை போடு ஓட்டை போடு நான்
ஆட்டை போட ஆட்டை போட என
ஆடுகள் தலையில் நோட்டை
போட்டு சம்மதம் கேட்டு
ஒரே வெட்டு...............
நாறும் அரசியல்
மாறுமா ..............?
இலவச அரிசி
போதுமா............?
உரிமைகள் இழந்தோம்
உணர்வுகள் இழந்தோம்
உயிரை மட்டும் மிச்சம்
கொண்டு நடைபிணமாய்
வளர்ந்தோம்
நாற்றம் வேண்டாம்
மாற்றம் வேண்டும்
நீயும் நானும் அதை
மாற்ற வேண்டும். ........