கற்றுக்கொள்ளுங்கள் மனிதர்களே

"எதை எதையோ நினைத்து
ஏங்குகிறது மனம்
ஏன் என்று
எவர்க்கும் புரியாது

புரிந்துவிட்டால்
மனம் கூட
கல்லறையகிவிடும்
சில பொழுதுகளில்!"

"தினம் தினம் எதையோ நினைத்து
துடித்து கொண்டு
இருக்கிறது இதயம்
ஏன் என்று
எவர்க்கும் தெரிவதில்லை

தெரிந்துவிட்டால்
இதயம் கூட
நின்று விடும்
சில நிமிடங்களில்!"

"ஆசை ஆசையாய் எதையோ
பார்த்துகொண்டு
இருக்கிறது கண்கள்
ஏன் என்று
எவர்க்கும் புலப்படுவதில்லை

புலப்படுவிட்டால்
கண்கள் கூட
குருடாகிவிடும்
வாழ்நாள் முழுவதும்!"

கற்றுக்கொள்ளுங்கள் மனிதர்களே

எதையும் நினைத்து
ஏங்க தேவையில்லை

எதையும் நினைத்து
துடிக்க தேவையில்லை

எதையும் பார்த்து
ஆசைப்பட தேவையில்லை

இருப்பதை கொண்டு
வாழக் கற்றுக்கொண்டால்

எழுதியவர் : கஸ்தூரி.ம (22-Jun-14, 12:09 pm)
பார்வை : 52

மேலே