என் உயிர் தோழிக்கு

தோழியே,

பயணங்கள் வேறு திசை
ஆயிரம் பேர் அறிமுகம்
பொய்யான புன்னகை
வியாபார நட்பு
நேரங்களின் பற்றாகுறை
நிமிடங்கள் சேகரிப்பு
போராடும் வாழ்க்கை
புரியாத திருப்பம்
துரத்தும் உலகம்
தூரத்தில் சந்தோசம்

இப்படி சோர்ந்து போகும் நேரங்களில்
சாய்ந்து கொள்ள இன்று நீயில்லை

உன்னை இழந்து எதை அடைவேன்
உன்னை அடைய எதையும் இழப்பேன்

உன் பெயர் கேட்கும் திசையில்
ஆர்வத்துடன் திரும்புவது
அநிச்சை செயலாகிவிட்டது.

வாரத்தில் ஒரு முறையேனும் வந்துவிடுவாய்
கனவுதான் என்றாலும்
கண் விழித்தாலும் களைவதில்லை.

கதவை தட்டாமல்
உள்ளே வரும் உரிமை
காதலிக்கு கூட இல்லை
தோழியே உன்னை தவிர

வெற்றாய் கிடந்த வீட்டில்
விருந்தாளியாக வந்தாய்
விருந்தாளியாக வந்து
விளக்கேற்றி சென்றாய்

கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும்
இன்றும் தேடி கொண்டிருக்கிறேன்
இந்த கூடத்தில் உன் போன்ற ஒரு தோழியை

எழுதியவர் : பாலபிரசாத் (22-Jun-14, 5:23 pm)
Tanglish : en uyir thozhiku
பார்வை : 275

மேலே