சிறந்த செல்வம்

சிறந்த செல்வம்

பொக்கை வாய் திறப்பாய்!
பொங்கியே நீ சிரிப்பாய்!
உன்னிதழோரம் வடியும்!
உமிழ் நீரும் !
இலை மேல் பனியாய்!
அழகூட்டும் உந்தனுக்கு!!

கருத்தில்லா ஒலி மொழிவாய்!
கரும்பின் மிகு சுவையாய்!
காதுக்குத் தேனாய்!
கனி மொழி மழலையாய்!
எம்மொழியும் அதற்கீடாய்!
காணலையே ஜெகமதிலே!!

அழுக்காக நீ இருப்பாய் !
அலங்காரமாயிருப்பாய்!
அழகுடையும் உடுத்திருப்பாய்!
சில வேளை
உடையேதும் உடுத்தியிராய்!
ஆனாலும் உன்னழகு!
குறையலையே எப்போதும்!

உன்னுள்ளம் வெறுமையாய்!
மாசுகள் அற்றதாய்!
கவலைகள் இன்றியே
இருப்பதால் என்னவோ
உன்னுடல் மென்மையாய்!
உன்னுளம் பசுமையாய்!
என்னுளம் கிரங்கச் செய்தாய்!!

கரு விழி நீ கொண்டாய்!
கவர்ந்திட இமை திறந்தாய் - என்
கவலையை விரட்டிவிட்டாய்!
மழலை வார்த்தையினால்
மனம் குளிர பேசிடுவாய்!
எனை மறந்து உனை நினைந்து!
மகிழ்ந்திருந்தே வாழச் செய்தாய்!!

பார் போற்றும் மனிதனாய்!
உனை ஆக்க நானினைத்து
உன்னுளம் நிரப்பி விட்டேன்!
உலகத்து ஆசா பாசங்களை!
அதனால் வந்தது!
கபடம் முதல்!
வஞ்சனை இன்னும் பல!

சிறந்த செல்வமாய்!
எங்களுக்கு நீ இருப்பாய்!
எச் செல்வம் ஆனாலும்!
உலகில் உண்டோ?
உனக்கு நிகர் என்றிருப்பாய்!
எங்களுக்கு!!

குழந்தையாய் சிறுவனாய்!
கபடம் விட்டு வாழ்ந்திட்டால்
கவலை இல்லை!
கலகம் இல்லை!
கருணை உள்ளம் கொண்டவராய்!
காலத்தை வென்றிடலாம்!!!
......................................................................................
ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (22-Jun-14, 10:14 pm)
பார்வை : 208

மேலே