அவன் என்னோடு பேசிக்கொண்டிருந்தான்

அவன் என்னோடு
பேசிக்கொண்டிருந்தான் !

பொளேர் என
அவன் செவிட்டில் விட்டேன் !

அவன் என்னோடு
பேசிக்கொண்டிருந்தான் !

முஷ்டியை
மடக்கிப்பின்னுக்கிழுத்து
அவன் அடிவயிற்றில்
ஒரு செலுத்து ............!

அவன் என்னோடு
பேசிக்கொண்டிருந்தான் !

அவன்
தலைமுடியைப் பற்றி
கிறுகிறுவெனச் சுற்றி
சுவற்றில்
சொத் என மோதினேன் !

அவன் என்னோடு
பேசிக்கொண்டிருந்தான் !

அவன்
கால்களைப்பிடித்து
வாரியெடுத்து
ஓங்கித் தரையில்
தப்பினேன் !

அவன் என்னோடு
பேசிக்கொண்டிருந்தான் !

மேலும்,
மேற்படி
பேசிக்கொண்டிருந்த
அந்த
மேற்படி மனிதன்
என்
மேலதிகாரி !!!

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (24-Jun-14, 9:47 am)
பார்வை : 64

மேலே