புயல் காற்றுக்கு பாகுபாடு மிகுதியே

புயல் காற்றுக்கு பாகுபாடு மிகுதியே....!

அது தென்னையையும், பனையையும்
சாய்த்தது கொஞ்சமும் இரக்கம்
இல்லாமலே

மெலிந்த நாணலை வளைத்து
பின் நிமிர்த்து விட்டது சேதம்
இல்லாமலே

ஓலை குடிலை தூக்கி சென்றது
தன்னுடனே, ஒரு வேகத்துடனே

கல் மாளிகையை விட்டு சென்றது
ஒன்றும் செய்யாமலே

மண்ணை கிளப்பி அதை மனிதரின்
கண்ணில் நிரப்பி,

மணலை எடுத்து, அதை எங்கெங்கும்
இறைத்து

எத்தனையோ அட்டகாசம் செய்தது
பூமியிலே

ஆனால் வானை தொடாமல்
வாழ்த்தி சென்றது போகும்
வழியிலே

அதனாலே புயல் காற்றுக்கு
உள்ளது மிகுந்த பாகுபாடே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (25-Jun-14, 1:11 pm)
பார்வை : 71

மேலே