ஆண் பெண் தலைகீழ் விகிதங்கள்
வண்ணத்துப் பூச்சியின்
சிறகு பறித்து,
எனது குறிப்பேட்டில்
பறப்பது போல் ஒட்டி
அதன் உடலமைப்பை மட்டும்
நானாகவே வரைந்து
வண்ணம் தீட்டினேன்…
முதலிரவில் தெரிந்த வண்ணங்கள்
வலுவிழந்து போனதாக
நானே நம்பிய
பின் தொடர்ந்த நாட்களில்….
வேறு வேறு
வண்ணத்துப் பூச்சிகளை
கோடுகளாலும் வண்ணங்களாலும்
வரைந்து கழித்தேன்…
என் குறிப்பேட்டு வண்ணத்துப் பூச்சி
குழந்தை பெற்ற பின்
மேலும் பல வண்ணங்களைத் தேடுவதே
வாடிக்கையானது….
ஒரு தற்செயல் நிகழ்வில்…
என் குழந்தையிடமிருந்த
அதன் குறிப்பேட்டின்
பக்கங்கள் அனைத்திலும்
ஏன் என்னையே நிறைத்திருந்தது
அப் பைத்தியக்கார மனைவிப் பூச்சி…?