மழலை

பாலூட்டும் தாயின் மகிழ்ச்சி
காலாட்டும் பொக்கை வாய் மழலையின் சிரிப்பில்!
திக்கி பேசும்! தத்தி தவழும்!
பங்கமில்லா தங்கங்கள்!
பாசத்தின் அங்கங்கள்!
சிந்தனை இல்லா சப்தங்கள்
சிரிக்க தெரிந்த உயிர் சிற்பங்கள்!
மழலைக்கு இல்லை மனபேதங்கள்!
மனித குல சாபங்கள்! சங்கடங்கள்!
மழலை தானகவே வளர தளம் கொடுப்போம்!
தவறுகளை தள்ளி வைப்போம்!