பட்டதாரியின் கவலை
காரிய இரவினிலே
தகடென மின்னும் மத்தாப்புகள்
தறிக்கு வெடிக்கையிலே
புதிதென பிறந்ததாம் வியஜ
புதுவருடம்
ஆண்டுகள் ஓவொன்றும்
அலைகளையும் என்வாழ்க்கை
அமைதியை தேடியே உருகுதடி
நிரந்த அரச வேலையைத்தேடி
பல்கலை படிப்பு முடிந்து
இராண்டு ஓடியது போல -வேலைக்காய்
இரவிரவாய் எத்தனை பயணம்
ஏக்கத்துடன் என் நெஞ்சம்
MBA முடித்த பின்னே
எல்லையில்லா கனவுடன்
எட்டி பார்த்தேன் சமுகத்தை- வேலைக்காய்
எட்டியே உதைந்தது வேலையில்லை என்று
ஏறாத கம்பனி இல்லை
எழுதாத அரச தேர்வில்லை வாழ்வில்
எழுந்திட முடியும் என்று
எண்ணம் விட்டு போகாதடி
கம்பஸ் வாழ்க்கையிலே பட்டென
குதித்த என் தேவதையே உன்
குடும்பத்துக்கான என்வாக்கை
காப்பாற்றிட இன்னும் ஒருவருடம்
கைபிடிக்கும் காலமதை உன்
தந்தையை குறிக்க சொல்லு
இன்னும் சில மாதம்களில்
வேலையுடன் உன்னை கரம்
பிடிக்க அவர்முன்னால்
யாரிடமும் கையேந்தத என் வாழ்கை
உன்னிடம் கைகட்டி நிற்குதடி
நம் காதல் வாழ
ஏக்கம் பலவிருந்தும்
காதலுடன் சிறப்புற வாழ்வோம்