தெரியாத மதம் குழந்தைக்கு -நாகூர் லெத்தீப்

அறியாத
மதம் தெரியாத
பெயர் பிறக்கும்
குழந்தைக்கு .......!

வளரும்
குழந்தை அன்பை
பெரும்
மதத்தை விடும்.........!

தவழும்
அழகிலே மதமில்லை
இங்கே பிரிவினை
இல்லை.......!

ஜாதிகள் துறந்த
குழந்தைகளே
உலகை படைக்கும்
செல்வங்கள்........!

செல்வமும்
இல்லை மன
வேதனயும் இல்லை
பருவத்திலே......!

பிஞ்சு முகத்தை
பார்த்தல்
ஜாதிகள் ஒழியுமே
அடியோடு.......!

சமத்துவம்
குழந்தைகளின்
விளையாட்டில்
என்றுமே........!

பிரிவினை
சாகட்டும் உலகில்
மனித இனம்
வாழட்டும்.......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (27-Jun-14, 11:40 am)
பார்வை : 111

மேலே