தீர்ப்பின் தீர்வு
ஒரு குருவிடம் படித்து வந்த இரண்டு சீடர்கள் குருவின் தோட்டதத்திலிருந்த மாங்காய்களைத் திருடி பங்கிட்டு கொண்டனர் .இதையறிந்த குரு இருவரையும் தனித்தனியே அழைத்து விசாரித்துவிட்டு ஒரு சீடனை மன்னித்துவிட்டு மற்றொருவனுக்கு மட்டும் தன்டனையளித்தார் .தன்டனை பெற்ற சீடனோ நங்களிருவரும் சேர்ந்துதான் தவறு செய்தோம் ஏன் எனக்கு மட்டும் தன்டனையென்று கேட்டான் .குரு சொன்னார் 'நான் அவனை தனியே விசாரித்தபோது தவறை ஒப்பக்கொண்டதுடன் இனி அவ்வாறு செய்ய மட்டேன் என்றான் ஆனால் நீ செய்த தவறை மறைத்ததுடன் மற்றவர் மீது பழி சுமத்தினாய் . அவனை மன்னிக்க காரணம் "இனியும் தவறு செய்தால் குரு கண்டுபிடித்து விடுவாரென்ற பயத்தில்" அவன் தவறு செய்யமாட்டான். உன்னை மன்னித்திருந்தால் தவறு செய்துவிட்டு அடுதவர் மீது பழிபோட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் தவறு செய்வாய்.தன்டனையென்பது எதிர்காலத்தவறுகளை தடுப்பதற்கேயன்றி செய்துவிட்ட தவறுக்கல்ல' என்றார்