கவிதை எழுத்து
கவிதை எழுது தோழா !
-------------------------------------------------
எதுகையினை பிடித்து
மோனையினை மடித்து
எழுதுவதோ கவிதை ?
எளியோருக்கும் எழுத்து கூட்டி
படிப்போருக்கும்
எளிதில் புரிவதாய் அமைவதே கவிதை !
கொஞ்சம் கருத்து நிறைய கற்பனை
நிறைந்திருந்தால் போதும்
நீ எழுதுவது நிறைய பேருக்கு பிடிக்கும் !
அதைவிடுத்து
இலக்கிய கடலில் மூழ்கி எழுந்து
கவிதை எனும் முத்தெடுத்தால்
அடுத்த நூற்றாண்டில்தான் உன் கவிதை அரங்கேறும் !
எளிமையாய் எழுதிபார்
உன் கருத்தில் எண்ணங்கள் வட்டமிடும் !
ஏழ்மையை போக்கிட எழுதினாலோ
எதிர்காலம் உன் கவிதையினை முத்தமிடும் !
எடு எழுதுகோலை எழுது கவிதையை !