திசை மாறும் திருப்பங்கள்- 2 ✿ சந்தோஷ் ✿

சில பிழைகள்
திருப்பங்களாகின்றன.
சில திருப்பங்கள்
திசைகளை மாற்றுகின்றன.


விசையோடு பயணித்தாலும்
ஓசையின்றி சில திருப்பங்கள்
திசைகளை திருத்திடும்.

தன்னம்பிக்கை அம்புகள்
வாழ்வு நாணலில் பொருத்தி
வெற்றி குறியில்
சாதனை திசைநோக்கி
எய்திடும் தருணம்
நப்பாசை பார்வைகள் ஒரு
துடிப்பான இளைஞனின்
பொன்னான இலட்சியத்தில்
திருப்பங்களை உண்டாக்கிடும்.

இளைஞனே..!
இலட்சிய நேர்கோட்டில்
நீ பயணித்திடும் போது
தவறுகள் திருப்பங்களாகி
திருப்பங்கள் பிழையாகி
பிழைகள் வாழ்வை
கொலை செய்திடும்.

அற்ப மாயைகளுக்கு
அலையாதே............!
சொற்ப ஆசைகளுக்கு
வளையாதே....!

அதோ பார்..!
வெற்றிக்கனி..!
எடு அம்பை..!
இலட்சிய பார்வை வை..!
அலட்சிய மனதை களை..!
தொடு அம்பினை..!
விடு..... இழத்து விடு...!
விசையாக விடு..!
வெறித்தனமாக விடு..!

இதோ உன் காலடியில்
வெற்றி....கனிகள்..!

தெறித்து ஓடுது பார்
நீ கண்ட அவமானங்கள்..!
தெளிக்கிறது பார்
சந்தோஷ தூறல்கள்.!
வெந்துமடிகிறது பார்
உன் தோல்விகள்....!

வெறிக்கொண்டு
வெற்றி பெற்றிடு
வெற்றிக்கண்டு
வெறி கொள்ளாதே...!

---இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (27-Jun-14, 10:31 pm)
பார்வை : 228

மேலே