நல்லதா கெட்டதா

ஆடவந்தவன் அடங்கிப்புட்டா
நல்லதா கெட்டதா

அடங்கிநொந்தவன் ஆடிப்புட்டா
நல்லதா கெட்டதா

தெரிஞ்சதெல்லாம் மறக்கச்சொல்ல
நல்லதா கெட்டதா

மறந்ததெல்லாம் நினைக்கச்சொல்ல
நல்லதா கெட்டதா

கூட்டமான நாட்டு வாழ்க்கை
நல்லதா கெட்டதா

மறுபடியும் காட்டு வாழ்க்கை
நல்லாதா கெட்டதா

சேர்த்துவச்சவன் தொலைச்சு நின்னா
நல்லதா கெட்டதா

தொலைச்சவனை சேர்த்து நின்னா
நல்லதா கெட்டதா

கூடிக்கூடித் தனிச்சு நின்னா
நல்லதா கெட்டதா

தனிச்சு நின்னு களைச்சுப் போனா
நல்லதா கெட்டதா

எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டா
நல்லதா கெட்டதா

எல்லாத்தையும் விலகி புட்டா
நல்லதா கெட்டதா

பொழச்சுப்போன்னு பொழைக்கறது
நல்லதா கெட்டதா

செத்துப்போனவன் பொழைக்கறது
நல்லதா கெட்டதா

பூமியதிரும் சாமியாட்டம்
நல்லதா கெட்டதா

பூமியுதிரும் காசோட்டம்
நல்லதா கெட்டதா

நாலு பாட்டு படிக்கிறேனே
நல்லதா கெட்டதா

நாலும் தொட்டு படிக்கிறேனே
நல்லதா கெட்டதா

எழுதியவர் : சர்நா (28-Jun-14, 7:14 pm)
பார்வை : 142

மேலே