அவள் செய்த பாவம் என்ன
நவீன கால
வெள்ளத்தில்
நீச்சல் அடிக்க முடியாத அளவில்
ஓடும் ஓட்டத்தில்
அனைத்தும் மாறிவிட்டது
அன்பு பாசம், காதல், நட்பு
என்று அனைத்தும் மாறி விட்ட நிலையில்...
இன்னமும்
ஒரு கைம்பெண்ணை
பார்த்தவுடன்
அவளது
அப்பழுக்கற்ற முகத்தை
பார்த்தவுடன்
சகுனம் பார்க்கும்
தலைகீழ் நிலை மட்டும்
ஏன் இன்னும்
மாறவில்லை??
அவள் செய்த பாவம் என்ன??