சிந்தையில் சிதறுவதோ சிறிதளவு
படமும் படத்தின் பொருளும்
பார்வைக்கு வித்தியாசம்தான் !
இந்நிலையும் நிகழுமா இங்கே
இடியாய் இறங்குதே மனதிலே !
மூத்தவள் என்பதால் கவலையா
முழுபொறுப்பும் அவள் கையிலா !
மழலை என்பதால் மகிழ்ச்சியா
மனதில் பாசத்தின் ஊற்றுக்களா !
ஓட்டிப்பிறந்த உறவும் உலகில்
வருத்தமின்றி வாழ விழைகிறாள் !
ஒருபுறம் கலங்குது இதயமும்
வழியின்றி விற்றிட அழைக்கிறாள் !
அறியாத பருவமோ அறிவிக்குது
புரியாத பந்தபாசம் புன்னகைக்குது !
அன்பின் விளிம்பில் துடிக்குது
எண்ணத்தை எழுதியே காட்டுது !
விந்தைகள் உலகில் விண்ணளவு
சிந்தையில் சிதறுவதோ சிறிதளவு !
வேடிக்கை பார்க்கத்தான் முடியுது
வேறுவழி தெரியாமல் திணறுது !
பழனி குமார்