அன்பு தந்தையே
என்னை ஈன்ற தந்தையே
நீ எனக்கு செய்ததை விட
நான் உனக்கு செய்ய நினைப்பது
மிக அற்பமே .....
என்னை தோளில் சுமந்தாய்
என் உதைகளுக்கு பந்தாய்
உன் நெஞ்சை தந்தாய்
என் அழுகையில் உன் கைகளால்
என் கேசம் தடவுனாய் ....
உன் பாசம் மிகுதியில்
கொளுத்தும் வெயிலில்
வெறுங்காலால் தார் வீதியில்
நடந்தே சென்று
முகம் சுழிக்காமல்
எனக்காய் ஐஸ் வாங்கித்தந்தாய்
என்னை ஈன்றவனே
என் ஆசைகள் நான் கூறும் முன்பே
நீயே இனங்கண்டாய்...
நீ பாதியுண்டு
அன்றி உண்ணாமலும்
என் வயிறு குளிர வைத்தாய்
நீ கோமணம் கட்டினாலும்
என்னை கோட் சூட் போடவைத்தாய்
உன் பெயர் எழுதத் தெரியா நீ
என்னை ஆங்கிலம் பேசவைத்தாய்
குடிசையில் ஈர களிமண் தரையில்
நீ உறங்கினாலும்
என்னை நல்ல வரம் பார்த்து
அடுக்கு மாடியில் அமரவைத்தாய்
இத்தனை செய்த நீயோ
அதோ ஓரமாய் நின்று
என் சிரிப்பை பார்த்து அக மகிழ்கிறாய்....!
உன்னை நான் சுமந்து
உலகை சுற்றி வந்தாலும்
நான் பட்ட கடன் தீருமோ
என் அன்பு தந்தையே ..........!