மாற்றம் காணட்டும் மனிதன் அமைதியால் - சி எம் ஜேசு

மனிதனே மனிதனைக் கொல்லும்
மடமைக்கு விடிவு வராதா

உலகில் வதைபடும் மனிதர்க்கு
தெய்வம் உதவி தராதா

கொடுஞ்செயல் புரிந்து உலகை வலைக்கும்
தீவிர வாதத்திற்கு அமைதி வாராதா


நிறுத்தி நிம்மதி நாடி நிஜ வாழ்க்கை வாழ
நெஞ்சம் கொடியவர்க்கு இடம் தாராதா

மாற்றம் காணட்டும் மனிதன் அமைதியால்
மாண்பு அடையட்டும் நல் அன்பினால்

காடாக இருந்த நிலம் நாடாகியது - இப்போ
நாடாகிய நிலங்கள் காடாகிறது

நன்மை வேண்டி வேண்டாம் தீவிரவாதம்
அமைதி வழி கடந்து அடைவோம் தீர்ந்திடும் தேவை

எழுதியவர் : சி .எம் .ஜேசு (30-Jun-14, 12:29 pm)
பார்வை : 84

மேலே