சொல்லாமலே

வெட்டி எடுத்து...
வீசிவிட எண்ணி
வெறுக்க நினைக்கின்ற
ஒவ்வொரு நொடியும்

நெஞ்சிலே வேரூன்றி
நினைவுகளை உரமாக்கி
விருட்சமாய் வளருதே
இந்த காதல் விதை.

புன்சிரிப்பின் சிதறலில்
சிக்கித்தவிக்கும் என் சிந்தையில்
புரிந்தும் புரியாததுமாய்
ஓர் புதிர்...

என்னவளே...
உன் சிரிப்பொலிக்கும்
உன் கொலுசொலிக்கும்
என்னதான் வேறுபாடு??

உனக்கென காத்திருக்கும்
ஏகாந்தமான நேரங்கள்
எனக்கெதிராய் மாறும் மர்மம் தான் என்ன ?

காத்திருப்பின் கடைசி தருணமாய்
தேவதை நீ நெருங்கிவர...

சொல்லவந்த காதலை
சொல்லாமல் தவிக்கிறேன்
சொல்லிடதானே துடிக்கிறேன்

எழுதியவர் : ஜெகதீஷ் (1-Jul-14, 7:07 pm)
Tanglish : sollaamale
பார்வை : 123

மேலே