நீயும் நானும்

பூவும் புன்னகையும்
விரியும்போது அழகு
கண்ணும் இமையும்
கவியும்போது அழகு
அந்தியும் ஆதவனும்
மயங்கும்போது அழகு
மழலையும் தாயும்
அணைத்திடும்போது அழகு
மலரும் வசந்தமும்
சேர்ந்திடும்போது அழகு
நீயும் நானும்
காதலில் விழுந்திடும்போது அழகு
எழுந்து நடந்திடும்போது வாழ்வு !
----கவின் சாரலன்