கலியுக காதலி

இணையம் ஆறுதலாய் -
பிணைய ஏங்கும் நமக்கும் !
வலைத்தளம் வேந்தன் உன்னை முன்னிறுத்தியும் ,
வேண்டும் வேண்டும் என்னும் ஏக்கமே கடைசியில் எஞ்ச!

அலைபேசியில் காலம் மறந்து கட்டுண்டிருந்தும்
மேலும் மேலும் என்றே மனமும் ஏங்க !
விரல்களின் தாளங்கள் அதிவேகமாய் ,
விரைய மாட்டாயோ நீயும் அதன் வேகம் மிஞ்சியே...
என்னும் எண்ண ஓட்டத்துடன் !

……
தொழில்நுட்பங்களால் தீரா தாகம் -உன்
விழி நுட்பத்தால் ஊடுருவிய மோகம்!
மனிதனின் கண்டுபிடிப்புகளால் தளரா விலங்கு,
மன்மதன்! கொடுங்கோலன் பூட்டிய விலங்கு !

வாராயோ நீயும்! அவனையும் ஆட்டுவிக்க !
எந்தன் கோவே !!

எழுதியவர் : மகா! (1-Jul-14, 10:13 pm)
பார்வை : 125

மேலே