காதல் வேடம்
என்னை பயமுறுத்திய இரவுகள் உனக்கு
விருப்ப பட்டதால் தான் ஏனோ எனக்கும்
விருப்பம் -அன்பே
கசப்பெனினும் உன் விருப்ப பாகற்காய்
என் சமையலறையை அலங்கரிக்க .......
கம்யூனிஸ வாதியான என் வீட்டில்
லட்சுமி குடிவந்தாள் உன்னால் .....
ஏனோ மட்டை பந்து ரசிகனான
நான் இன்று கால் பந்தாட்ட ரசிகனாய் ............
பற்பல மாற்றங்கள் ,,,,,,, இவை மாற்றங்களா
இல்லை காதல் வேடமா ..........