ஊழ்வினை, ஊழ்வினை
ஊழ்வினை, ஊழ்வினை
அது படுத்துதே, பாடாய் என்னை
வாழ்வினை, வாழ்வினை
நான் வெறுக்க செய்யுதே ஒவ்வொரு நொடியுமே
தாழ்வினை, தாழ்வினை தான்
தருதே நான் பாடு பட்டு உழைத்துமே
வரவினை எல்லாம் வட்டிக்கு தரும் படி
நான் செய்த வினை என்னவோ?
செலவினை தான் தவிர்த்தும், ஈடு
கொடுக்க முடியவில்லையே
கொடும் வினை என்னை வந்து
ஆட்டி வைக்குதே
ஊழ்வினை வெல்வதற்கு ஏதேனும்
வழி சொல்லுங்களேன்
வாழ்வினில் நான் சிறப்பதற்கு
துணை நில்லுங்களேன்