என் தோழிக்காக

பள்ளிக்கு முதல் நாள் .....
உள்ளே பயத்துடன் வந்த என்னை அழைத்து
அன்பாய் பேசியவள் நீ.......

என் நட்பை பகிர்ந்து கொண்டவள் நீ ......

ஒரு நாளில்
ஓராயிரம் சண்டைகள் போட்டவள் நீ ......

என் தாய் பாசத்திற்கு ஈடாக மற்றொரு
தாயாக இருந்தவள் நீ ......

சோகம் வரும்போதெல்லாம் எனக்கு
சொர்கத்தை காட்டியவள் நீ .......

தோல்வியை தழுவிய போதெல்லாம் எனக்கு
தோள் கொடுத்தவள் நீ ........

என் அகராதியில் நீ என்ற சொல்லை நீக்கி .....
நாம் என்ற சொல்லை விதைத்தாய் ......

அந்த சொல்லுக்காக நாம் என்றும் பிரியாது
நல்ல நண்பர்களாய் இருக்க வேண்டும் ........


இப்படிக்கு ,
என் கடைசி மூச்சு உள்ள வரை உன் நட்பை சுவாசிக்கும்
உன் தோழன் ...

எழுதியவர் : முத்துப் பிரதீப் (2-Jul-14, 10:47 am)
Tanglish : en tholikkaga
பார்வை : 570

மேலே