+கற்பனைக்கு பஞ்சமில்லை+

கடல்நீருக்கும் பஞ்சமில்லை
கண்ணீருக்கும் பஞ்சமில்லை
செந்நீருக்கும் பஞ்சமில்லை
பன்னீருக்கும் பஞ்சமில்லை

தப்புக்கும் பஞ்சமில்லை
உப்புக்கும் பஞ்சமில்லை
மப்புக்கும் பஞ்சமில்லை
உழைப்புக்கும் பஞ்சமில்லை

கோபத்துக்கும் பஞ்சமில்லை
தாபத்துக்கும் பஞ்சமில்லை
கஷ்டத்துக்கும் பஞ்சமில்லை
இஷ்டத்துக்கும் பஞ்சமில்லை

பாட்டுக்கும் பஞ்சமில்லை
பகட்டுக்கும் பஞ்சமில்லை
வேட்டுக்கும் பஞ்சமில்லை
பூட்டுக்கும் பஞ்சமில்லை

அழகுக்கும் பஞ்சமில்லை
அழுகைக்கும் பஞ்சமில்லை
இன்னுமென்ன பஞ்சம்சொல்ல‌
கற்பனைக்கு பஞ்சமில்லை

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Jul-14, 3:55 pm)
பார்வை : 260

மேலே